6 வயது சிறுவன் வயிற்றில் அரைப்பை அளவில் புழுக்கள்.. அதிர்ச்சியில் உறைந்து போன மருத்துவர்கள்!

0
6 வயது சிறுவன் வயிற்றில் அரைப்பை அளவில் புழுக்கள்.. அதிர்ச்சியில் உறைந்து போன மருத்துவர்கள்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 6 வயது சிறுவனின் குடல் பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ அளவிலான அஸ்காரிஸ் புழுக்கள் இருப்பதை கண்ட மருத்துவர்கள் அதை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர்.

அஸ்காரிஸ் புழுக்கள்:

பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் வயிற்றில் புழுக்கள் இருப்பது இயல்பு. அதாவது நாம் சாப்பிடும் உணவு சில பாக்ட்டீரியா புழுக்கள் நன்மை செய்தாலும் சில புழுக்கள் நமக்கு தீமை செய்து விடும். அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் நெடு நாளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு இருந்திருக்கிறான். இதனை தொடர்ந்து அவரது பெற்றோர்கள் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர்.

அதன் பின்னர் சிறுவனின் உடலை எக்ஸ்ரே ஸ்கேன் செய்து பார்த்த போது மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சிறுவனின் சிறுகுடல் அடைக்கப்பட்டிருப்பதை கண்டு மருத்துவர்கள் சிறு குடலில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை மருத்துவர்கள் நடத்திய அறுவை சிகிச்சையின் போது சிறுவனின் சிறு குடல் பகுதியில் ஒரு கிலோ அளவிலான அஸ்காரிஸ் புழுக்கள் இருந்துள்ளது.

அரசு பேருந்தில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கும் பள்ளி மாணவர்கள் – கள்ளக்குறிச்சியில் நடந்த பயங்கரம்!

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதை கண்ட மருத்துவர்கள் பேரதிர்ச்சி ஆளானார்கள். மேலும் சிறு குடல் பகுதியில் உள்ள அஸ்காரிஸ் புழுக்களை அகற்றி, சிறுவனை கண்காணிப்பில் வைத்துள்ளனர். 6 வயது சிறுவனின் உடலில் இவ்வாறு புழுக்கள் இருந்துள்ளது அனைவர்க்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here