இந்த மாதத்தின் இறுதியில் சசிகலா “ரிலீஸ்” – வழக்கறிஞர் தகவல்!!!

0
sasikala
sasikala

சசிகலா இந்த மாதத்தின் இறுதியில் பெங்களூர் சிறைச்சாலையில் இருந்து திரும்புவார் என்று கூறியுள்ளார் அவரது வழக்கறிஞர், ராஜாசெந்தூர பாண்டியன்.

வருமானத்துறை சோதனை:

கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் வீட்டிற்கு எதிராக இருந்த 8 கிரவுண்டு மதிப்பிலான இடத்தை பினாமியின் பெயரில் வாங்கியதால், அவரது சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கிவிட்டு அவரை கைது செய்தது. அவரை பெங்களூரில் உள்ள சிறையில் அடைத்தது. தற்போது அந்த இடத்தில கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

sasikala
sasikala

ஆனால், அதனை நேற்று முன் தினம் வருமானவரித்துறையினர் முடக்கி அந்த இடத்திற்கு சீல் வைத்தனர். அந்த இடம் மட்டுமன்றி அவரது பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. வருமானத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு சசிகலா தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

வழக்கறிஞர் கூறியதாவது:

இந்த விவகாரம் குறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர பாண்டியன் கூறியதாவது “வருமானத்துறையினர் தவறாக நடந்து கொள்கின்றனர். அந்த சசிகலாவின் சொத்துக்களே கிடையாது. அது தெலுங்கானாவை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் சொத்து. அதில் சசிகலா ஒரு பங்குதாரர் மட்டுமே. பங்குதாரர் எப்படி ஒரு சொத்துக்கு உரிமையாளராக கருதப்படுவார்.”

rajasenthura pandian advocate
rajasenthura pandian advocate

“இந்த விவகாரத்தில் வருமானவரித்துறையினர் நுழைந்து இருக்க கூடாது. ஒருவர் சரியாய் தனது சொத்திற்கு கணக்கு கட்டாவிட்டால் தான் வரும்வாரித்துறையினர் சோதனையிட முடியும். இது தவறான அணுகுமுறையாக கருதப்படுகிறது. நாங்கள் இதனை சட்டரீதியாக கையாள்வோம். சிறையில் நன்னடத்தை காரணமாக சசிகலா இந்த மாதத்தின் இறுதிக்குள் வெளிவர உள்ளார். அவருக்கு தண்டனை குறைக்கப்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here