இன்று சனி மஹாபிரதோஷம் – எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை தரும்??

0

டிசம்பர் 12 சனிக்கிழமை மஹாபிரதோஷம். இன்று சிவன் கோவில்களுக்கு சென்று சிவபெருமானையும், நந்தி தேவரையும் வழிபட்டால் நம்மை பிடித்த சகல துன்பங்களும் நம்மை விட்டு ஓடி போகும்.

சனி மஹாபிரதோஷம்

சனிப்பிரதோஷ நாளில் சிவபெருமானின் காவல் தெய்வமான நந்தியம் பெருமானை வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை.சனிக்கிழ மையன்று வரும் பிரதோஷ நாட்களில் நந்தி தேவரை வணங்குவதோடு, அபிஷேகத்திற்கு பொருட்கள் வாங்கி தரலாம். மற்ற பிரதோஷ நாட்களை விட மகா பிரதோஷம் எனப்படும் சனிப்பிரதோஷ நாள் மிகவும் விசேஷமானது. சனிப்பிரதோஷ நாளில் நந்தி தேவரை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் சகலவிதமான துன்பங்களும் நம்மை விட்டு ஒடிப்போகும் என்பது நம் முன்னோர்களின் கருத்து.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தேவர்களும், முனிவர்களும் மகிழ்ச்சி அடையும் வகையில், சிவபெருமான் பிரணவத்தின் முழு வடிவமான நந்தியின் கொம்புகளின் நடுவில் நின்று ஆனந்த தாண்டவம் ஆடினார். இதைக் கண்ட தேவர்கள், முனிவர்கள் உள்பட அனைவரும் எம்பெருமானின் ஆனந்த தாண்டவத்தை தரிசித்தார்கள். இப்படி எம்பெருமான் அனைவருக்கும் அருள் புரிந்த காலமே பிரதோஷ காலம் என்று கூறப்படுகிறது.

மேலும், சனிப்பிரதோஷ நாளில் எம்பெருமான் ஈசனை வழிபட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சிவபெருமான வழிபாடு செய்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். சனிப்பிரதோஷ காலத்தில் நந்தியை வழிபாடு செய்தால் இந்திரனுக்கு சமமான பெயரும் புகழும், செல்வாக்கும் கிட்டும். அன்றைக்கு செய்யும் எந்தவித தானமும் எண்ணிலடங்கா பலனைக் கொடுக்கும் என்பதோடு, இனிமேல் பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்று சிவபுராணம் சொல்கிறது.

ஆந்திராவில் பரவும் மர்ம நோய் தமிழகத்தில் நுழையுமா??

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, சட்ஜ பிரபா பிரதோஷம். ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷங்கள் வந்தால் அதனை அஷ்டதிக் பிரதோஷம். ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இந்த நவக்கிரகப் பிரதோஷம் மிகவும் அரிது. இந்த பிரதோஷங்களில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக்கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

யாருக்கெல்லாம் சனிப்பிரதோஷம் நன்மை தரும் 12 ராசிக்காரர்களும் இந்த சனிப்பிரதோஷம் நன்மையை தரும். ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அஷ்டம சனி என நடக்கும் சனி கிரகக்கோளாறு உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த சனிப்பிரதோஷ நாளில் சிவன் கோவிலுக்கு சென்று சிவனையும், நந்தியம் பெருமானையும் வழங்க வேண்டும்.

சனிப்பிரதோஷம் அன்று சிவனை வணங்கினால் கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறைந்து நன்மைகள் நடக்கும், பஞ்ச பாவமும் நீங்கி சிவன் அருளால் நன்மை பெற்று வாழ்வார்கள். எனவே, சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷங்கள் அன்று சிவனை வழிபடுவது சிறந்தது. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என நம் முன்று கண் தெய்வமான சிவனை வணங்குவோம் வாழ்வில் வெற்றி பெறுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here