நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சாண்டி மனைவி செய்த காரியத்தை பாருங்க… புல்லரித்து போன ரசிகர்கள்!!!

0

திரைத்துறையில் பிரபல முன்னணி நடன இயக்குனராக வலம் வருபவர் சாண்டி மாஸ்டர். அவரின் மனைவி சமீபத்தில் இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில் அவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது சாண்டி மாஸ்டர் உடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கலைஞர் டிவியின் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சாண்டி மாஸ்டர். அதன் பிறகு அவர் பல முன்னணி நடிகர்களின்  பல வெற்றி படங்களுக்கு நடனம் அமைத்து உள்ளார். மேலும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திறமையாக விளையாடி இறுதி நாள் வரை இருந்து இரண்டாவது வெற்றியாளராக வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இவருக்கு சில்வியா என்ற மனைவியும், சூசன்னா என்ற 3 வயது பெண் குழந்தையும் உள்ளது. இதையடுத்து சமீபத்தில் அவரின் மனைவி இரண்டாவது முறை கர்ப்பமடைந்தார் என்பதை அறிவித்திருந்தார் சாண்டி. மேலும் அவரின் வளைகாப்பு புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது.

இந்நிலையில்  சில்வியாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது  சில்வியா  நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது தன் கணவருடன் ஒரு பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் மெய்சிலிர்த்து போய் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here