தமிழக மருத்துவர்களுக்கு சுதந்திரத்தினத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்…, அரசு எடுக்க போகும் அதிரடி முடிவு இதுதான்!!

0
தமிழக மருத்துவர்களுக்கு சுதந்திரத்தினத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்..., அரசு எடுக்க போகும் அதிரடி முடிவு இதுதான்!!
தமிழக மருத்துவர்களுக்கு சுதந்திரத்தினத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்..., அரசு எடுக்க போகும் அதிரடி முடிவு இதுதான்!!

தமிழகத்தில், கொரோனா கால கட்டத்தின் போது மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பலர் தங்களது உயிரை பணயம் வைத்து பணி செய்தனர். இவர்களில், கொரோனா தொற்று நோயாளிகளை நேருக்கு நேர் சந்தித்த மருத்துவர்கள், ‘மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்’ என கடந்த 4 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதியுடன் இந்த தொடர் போராட்டம் தொடங்கி 4 ஆண்டுகள் முடிவடைய உள்ளது. ஆனால், மருத்துவர்களின் இந்த தொடர் போராட்டத்திற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது குறித்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், உயிரை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் 4 ஆண்டு கால போராட்டத்திற்கு தமிழக அரசு வரும் சுதந்திர தினத்தன்று முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதாவது, “மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். மேலும், கொரோனா காலத்தில் பணி செய்யும் போது இறந்த 9 மருத்துவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இவை அனைத்தையும் வரும் ஆகஸ்ட் 15 (சுதந்திர தினத்தில்) தமிழக அரசு அறிவிக்க வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காருக்குள் இப்படியொரு வேலையை பார்த்த நயன்தாரா.., ஆதாரத்துடன் வெளியான புகைப்படம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here