நீங்கள் நடிகையே இல்லை.. விமர்சனத்திற்க்கு உள்ளான சாய் பல்லவி.. கண்டனம் தெரிவித்த அரசியல் பிரபலம்!!

0
சாய் பல்லவியை திட்டி விளாசிய முன்னணி நடிகை

துளி கூட மேக்கப் இல்லாமல் தனது இயற்கை அழகால் கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாரித்த சாய் பல்லவியின் உருவத்தை வைத்து தற்போது சிலர் கேலி செய்துள்ளனர். தமிழிசை சௌந்தரராஜன் உள்பட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சாய் பல்லவி:

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ”பிரேமம்” திரைபடத்தின் மூலமாக உலகையே தன் பக்கம் ஈர்த்தவர் தான் சாய் பல்லவி. இவர் தனது இயற்கையான அழகை கொண்டே பல ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளார். இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்திலுமே எளிமையான தோற்றத்தில் இயற்கையாகவே பிரதிபலிப்பார்.எக்கச்சக்க ரசிகர் கூட்டங்களை சம்பாரித்து வைத்துள்ள இவர் தற்போது ஒரு விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.

அதாவது சாய் பல்லவியின் ஷியாம் சிங்கா ராய் பட புகைப்படத்தை பேஸ்புக் பயனர் ஒருவர் பேஸ்புக்கில் பகிர்ந்து அவரது உருவத்தை கேலி செய்துள்ளார். ”உதடு சரியில்லை, மூக்கும் இவ்வளவு பெரிதாக இருக்கிறது, நடிகைக்கு உண்டான வசீகர தோற்றம் உங்களிடம் சுத்தமாக இல்லவே இல்லை” என பகிரங்கமாக கூறியுள்ளார். பலரும் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒருவரின் உருவத்தை வைத்து யாரும் கேலி கிண்டல் செய்ய வேண்டாம் என தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here