முடி உதிர்வை முழுமையாக தடுக்க வேண்டுமா?? அப்போ மிஸ் பண்ணாம இதை படிங்க!!

0

முடி உதிர்வதை தடுக்க அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்து வீட்டிலேயே இதற்கான தீர்வை எவ்வாறு செய்யலாம் என்பதை பின்வருவனவற்றில் பார்க்கலாம்.

ஹேர் ஆயில்:

தற்போது இருக்கும் காலகட்டத்தில் ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழலில் உள்ளதால் யாராலுமே சரியாக உடல் நிலையில் கவனித்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது.

Bottle pouring virgin olive oil in a bowl close up

மேலும் எந்த நேரமும் கணினி முன்னால் வேலை செய்து வருவதால் உடல் உஷ்ணம் ஏற்பட்டு முடி உதிர்வு அதிகமாக ஏற்படுகிறது. அதன் பிறகு தைராய்டு பிரச்சனை இருந்தாலும் முடி உதிர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இந்த முடி உதிர்வை சரி செய்ய வாரத்தில் ஒரு நாள் எண்ணெய் தேய்த்து குளித்து வந்தாலே முடி நன்றாக வளரும் மற்றும் உடல் உஷ்ணமும் குறைத்து விடும். மேலும் உடல் உஷ்ணத்தை சரி செய்து ஆரோக்கியமான முறையில் முடி வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் ஒன்றை தயாரிப்பது எவ்வாறு என்று பின்வருவனவற்றில் பார்க்கலாம்.

முதலில் தேங்காய் எண்ணெய் 200 கிராம் எடுத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு கரிசலாங்கண்ணி கீரையை 30 கிராம் மற்றும் வல்லாரை கீரை 30 கிராம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனை தொடர்ந்து, தேங்காய் எண்ணெய்யை காய்ச்சி அதனுடன் சுத்தம் செய்த வல்லாரை கீரையையும்,கரிசலாங்கண்ணிக் கீரையையும் சேர்க்க வேண்டும். அதன் பிறகு நன்றாக கொதித்து பதம் வந்தவுடன் இறக்கி விட வேண்டும். பிறகு சுத்தமான ஒரு பாத்திரத்தில் அதை மாற்றி வெயிலில் 5 முதல் 7 நாட்கள் வரை வைக்க வேண்டும்.

இந்த எண்ணெயை வெதுவெதுப்பான சூட்டில் வாரத்தில் ஒரு முறை அல்லது உங்களுக்கு நேரம் இருந்தால் இருமுறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வதை தடுக்கலாம். மேலும் உடல் உஷ்ணமும் குறையும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் கூறி வருகின்றனர். தலைமுடியும் நன்கு வளரும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here