மகர ஜோதி தரிசனம்: சபரிமலையில் பக்தர்கள் தங்க அனுமதி உண்டா? தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!!!

0

சபரிமலையில் மண்டல பூஜை முடிவடைந்து மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வருகிற 15ஆம் தேதி பிரசித்தி பெற்ற மகரஜோதி தரிசனம் நடைபெற இருப்பதால், கட்டுக்கடங்காத அளவில் பக்தர்கள் வருவார்கள். இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் ஜனவரி 15ஆம் தேதி வரை உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பக்தர்கள் மகரஜோதி தரிசனத்தை காண பாண்டித்தாவளம், மாளிகைப்புரம் கோவில் உள்ளிட்ட 10 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பக்தர்கள் முகாமிட தடை விதிக்கப்பட மாட்டாது எனவும் தேவசம் போர்டு அறிவுறுத்தி உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

பிக் பாஸ் சீசன் 7.. மாய வலையில் சிக்கிய சரவண விக்ரம்.. அவரின் தங்கை பதிவிட்ட பதிவு வைரல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here