இனி அது கேப்டனுடையது அல்ல., விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு பிரேமலதா செய்த அந்த காரியம்., அவரே வெளியிட்ட அப்டேட்!!

0
இனி அது கேப்டனுடையது அல்ல., விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு பிரேமலதா செய்த அந்த காரியம்., அவரே வெளியிட்ட அப்டேட்!!
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பலரின் மனம் கவர்ந்த நாயகனாக ஜொலித்து வந்தவர் தான் விஜயகாந்த். தனது அசத்தலான நடிப்பால் திரையுலகை கலக்கி வந்த இவர் எக்கசக்க படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தியுள்ளார். மேலும்  சினிமாவை தாண்டி தே.மு.தி.க. என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருந்தார். இவ்வாறு அரசியல் பணிகளை மேற்கொண்டு வந்த இவர் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இவரின் இறப்புக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இவரது மனைவி விஜய்காந்தின் எக்ஸ் தள பக்கத்தை @ivijayakant என்ற பெயரில் இருந்து @iampremalatha என மாற்றியுள்ளார். இதையடுத்து இவரது கட்சி தொண்டர்கள் தேமுதிகவின் பொதுச் செயலாளருக்கு தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here