சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல-மகர விளக்கு பூஜை நிறைவு., இவ்ளோ பேர் தரிசனம்? தேவசம் போர்டு அறிவிப்பு!!!

0

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக, கடந்த கார்த்திகை 1 ஆம் தேதி (நவம்பர் 17) நடை திறக்கப்பட்டது. அன்று முதல் அனுதினமும் எண்ணற்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த ஜன.15ஆம் தேதி பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனத்தை பக்தர்கள் தரிசனம் செய்து இருந்தனர். இதையடுத்து நேற்று (ஜன. 20) இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இன்று (ஜன. 21) அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, பந்தளம் ராஜ குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது., இதன்பின் காலை 6 மணியுடன் நடை சாத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் 50 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாகவும், ரூ.357.47 கோடி வருமானம் கிடைத்துள்ளதாகவும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

அயோத்தி கும்பாபிஷேக எதிரொலி: “இந்த செய்திகளை மட்டும் வெளியிட கூடாது”., மத்திய அரசு எச்சரிக்கை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here