துணிவா? வாரிசா? சபரிமலையில் மோதிக்கொள்ளும் ரசிகர்கள்., அதிரடி உத்தரவை பிறப்பித்த கேரள அரசு!!

0
துணிவா? வாரிசா? சபரிமலையில் மோதிக்கொள்ளும் ரசிகர்கள்., அதிரடி உத்தரவை பிறப்பித்த கேரள அரசு!!
துணிவா? வாரிசா? சபரிமலையில் மோதிக்கொள்ளும் ரசிகர்கள்., அதிரடி உத்தரவை பிறப்பித்த கேரள அரசு!!

கேரளாவில் உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் ஜனவரி 15ம் தேதி அன்று ஐயப்பனின் ஜோதி வடிவ காட்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நேரங்களில் எந்த ஒரு அசம்பாவித செயல்களும் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னேற்பாடுகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சினிமா ரசிகர்கள் சமூக ஊடகங்களில் மோதிக்கொள்வது மட்டுமல்லாமல் சில பக்தர்கள் சபரிமலை கோவிலுக்கும் சினிமா போஸ்டர்களை எடுத்து செல்கின்றனர்.

‘ரசிகர் ஒருவர் என்னை பார்த்து அந்த கேள்வி கேட்டார்’ – தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்த பாவனி ரெட்டி!!!

இதனால் கோவிலில் சினிமா போஸ்டர்கள் எடுத்து வருவது, இசைக்கருவிகள் இசைப்பது போன்ற செயலுக்கு தேவசம் போர்டு தடை விதிக்குமாறு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பக்தர்கள் சபரிமலை கோவிலின் நடைமுறை மற்றும் பாரம்பரியத்திற்கு உட்பட்ட போஸ்டர்களுக்கு அனுமதி வழங்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here