ஆர்டிஜிஎஸ் சேவையை 24*7 பயன்படுத்தலாம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!

0
rbi
rbi

ஆர்டிஜிஎஸ் எனும் பணப்பரிவர்த்தனை சேவை முறை இனிமேல் 24மணி நேரமும் பயன்பாட்டுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்மூலம் ரூபாய் 4 லட்சம் கோடிக்கு மேல் பரிவர்த்தனைகள் செய்யலாம்.

RTGS – நடப்பு நேர மொத்த தீர்வு:

RTGS என்பது நடப்பு நேரத்தில் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு அதிகளவிலான பணம் அனுப்பும் முறையாகும். இன்றைய காலகட்டத்தில் இணைய வழி பணப்பரிமாற்றம் அதிகளவில் நடைபெறுகிறது. தங்களது ஸ்மார்ட்போன், ஐபோன் மூலமாகவே வங்கிக்கு செல்லாமல் பணம் அனுப்புகிறார்கள் மக்கள். ஆனால், அதிகளவிலான பணம் பரிமாற்றத்திற்கு வங்கிக்கு தான் செல்ல வேண்டும். அதிகளவிலான பணம் அனுப்புவார்கள் தாங்கள் அனுப்பும் பணத்தின் மதிப்புக்கேற்ப அவற்றை அனுப்பும் முறைகளில் ஏதேனும் ஒரு முறை மூலம் பணம் அனுப்பலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குறிப்பாக நெஃப்ட்(NEFT), ஆர்டிஜிஎஸ்(RTGS ) மூலம் அனுப்பலாம். நெஃப்ட் மூலம் ரூ.2லட்சம் வரை மட்டுமே அனுப்பமுடியும். ரூ.2 லட்சத்துக்கு மேல் பணம் அனுப்புவர்கள் ஆர்டிஜிஎஸ் மூலம் அனுப்பலாம். ஆனால் இந்த முறையில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும். இதனால் ஆர்டிஜிஎஸ் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்நிலையை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ஒரு புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது.

2020 ஆண்டின் சிறந்த நபர்கள் ஜோ பிடன் & கமலா ஹாரிஸ்!!

வரும் 14-ம் தேதி முதல் 24 மணி நேரமும் இந்த ஆர்டிஜிஎஸ் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாள் ஒன்றிற்கு இந்தியாவில் 4 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் ஆர்டிஜிஎஸ் மூலம் பணப் பரிமாற்றம் நடைபெறுகிறது. இனி வரும் காலங்களில் அதிகரிக்கலாம் என தெரிகிறது. இந்த மாற்றத்தின் மூலம் உலக நாடுகளில் ஆர்டிஜிஎஸ் அதிகம் பயன்படுத்துபவர்களின் பட்டியலில் இந்தியாஇடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here