மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாள் – தமிழில் பதிவிட்ட அமித்ஷா!!

0

முண்டாசு கவிஞன் மகாகவி சுப்ரமணிய பாரதியின் 138-வது பிறந்தநாள் இன்று. “ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்று முழங்கிய தேசிய தலைவரின் பிறந்தநாள் அன்று, தேசிய ஒற்றுமை சின்னமாக அவரை போற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் ட்விட் செய்துள்ளார்.

தேசிய ஒற்றுமை சின்னம்:

எட்டயபுரத்து முண்டாசு கவிஞன் மகாகவி பாரதியாரின் 138-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. பாரதி 1882-ஆம் ஆண்டு சுப்பிரமணி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாய் பிறந்தார்.தன் வாழ்நாள் முழுவதும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், பெண் அடிமைத்தனம், ஜாதியக் கொடுமைகள் உட்பட பல அடக்குமுறைகளுக்கு எதிராக, எழுத்துகளால் சாட்டையடி கொடுத்த மாபெரும் எழுத்தாளராக, பாரதியார் திகழ்ந்தார்.இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தனது பேனாவை ஆயுதமாகப் பயன்படுத்திய பத்திரிகையாளர்களில் பாரதியார் குறிப்பிடத்தக்கவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவரது சிறப்புகளை போற்றும் விதமாக, அவர் பிறந்தநாள் அன்று தேசிய ஒற்றுமை சின்னமாக அவரை போற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் ட்விட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில் கூறியதாவது, “பாரத தாயின் புதல்வன் மகாகவி சுப்பிரமணிய பாரதி அவர்களின் ஜெயந்திக்கு எனது அஞ்சலி.

சித்ரா தங்கியிருந்த அறைக்கு அமைச்சரின் கார் வந்ததா?? ஜெயக்குமார் விளக்கம்!!

இவர் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான ஒரு முன்னோடி ஆவார். பாரதி தேசிய ஒற்றுமையின் சின்னமாக விளங்கினார். இவரின் தேசபக்தி கவிதைகள் சுதந்திர போராட்டத்தின் போது மக்களுக்கு மிக பெரிய உத்வேகம் அளித்தது” இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here