கடலுக்கு அடியில் இருந்தாலும் எளிதாக தொடர்பு கொள்ளலாம் – BSNL இன் அறிமுக திட்டம்!!

0
bsnl
bsnl

BSNL நிறுவனம் கடந்த வியாழன் அன்று செயற்கைகோள் அடிப்படையிலான இன்டர்நெட் ஆப் திங்ஸ் (IOT) என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையின் மூலமாக நாம் எங்கு இருந்தாலும் நமக்கு நெட்ஒர்க் மிகவும் நன்றாக கிடைக்கிறது. இந்த சேவையை பயன்படுத்துபவர்களுக்கு இனிமேல் சிக்னல் கிடைக்கவில்லை, சரியாக கேட்கவில்லை என்று எந்த பிரச்சனையும் இருக்காது. சிக்னல் டவர் இல்லாத இடங்களிலும் கூட இந்த கருவியின் மூலம் எளிதாக கைபேசியை பயன்படுத்தும் வகையில் BSNL அறிமுகம் செய்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அரசு நடத்தும் தொலை தொடர்பு நிறுவனமான BSNL கடந்த வியாழன் அன்று செயற்கைகோள் அடிப்படையில் செயல்படும் புதிய கருவியான இன்டர்நெட் ஆப் திங்ஸ் (IOT) அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நாட்டில் எந்த மூலையிலும், ஏன் கடலுக்கு அடியில் சென்றாலும் கூட தடை இல்லாத சேவையை பெற முடியும். இதன் மூலம் இந்த நெட்வொர்கின் சேவை முன்பை விட சிறப்பாக இருக்கும்.

இது தொடர்பாக BSNL நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இது தான் உலகின் முதல் (satelite-based IoT network) ஆகும். இந்த பணியை அமெரிக்க நிறுவனமான ஸ்கைலோ வுடன் இணைத்து இந்தியா செய்துள்ளது. இந்த நிறுவனம் இந்த சேவையை இந்தியாவில் உபயோகிப்பதற்கு ஏற்றவகையில் தயாரித்து உள்ளது.

‘என்னால தான் சித்ராவுக்கு இவ்வளவு பிரச்சனை’ – கதறி அழும் கதிர்!!

BSNL-ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் P.K.பூர்வார் தெரிவிக்கையில், அரசு நிறுவனங்கள் மட்டுமே இந்த ஸ்கைலோ வின் கருவிகளை பெற முடியும். மேலும் இதன் ஒரு யூனிட் ரூபாய் 10,000 ஆகும். இந்த சதுரவடிவ கருவியை பயனாளர்கள் தங்கள் ஆன்டிராய்டு மொபைல் உடன் இணைத்துக் கொள்ளலாம். 2021 ஆம் ஆண்டில் கோவிட் -19 தடுப்பூசியை திறம்பட வழங்குவதற்கான தளவாடத் துறைக்கு முக்கிய தரவுகளை வழங்கவும் ஸ்கிலோ உதவும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here