
சர்வதேச சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பான 95 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 13ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் ராஜமௌலியின் RRR திரைப்படத்தின் “நாட்டு நாட்டு” பாடல்களும், “தி எலிஃபென்ட் விஸ்பெரர்ஸ்” என்ற தமிழ் ஆவண குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்தது. இதையடுத்து சர்வதேச விருதுகளை பெற்ற “நாட்டு நாட்டு” பாடல் ஆஸ்கரையும் தட்டிச் சென்றது என பலரும் பாராட்டி வந்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் இவ்விழாவில் RRR படக் குழு சார்பாக கலந்து கொண்ட ராஜமௌலி மற்றும் அவரது மனைவி மற்றும் ராம் சரண் உள்ளிட்ட அனைவரும் கடைசி இருக்கையில் அமர்த்தப்பட்டது ஊடகங்களில் பல்வேறு சர்ச்சைக்கு உள்ளானது. தற்போது இது தொடர்பான முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இவ்விழாவில் கலந்து கொள்ள சந்திரபோஸ் மற்றும் M.M.கீரவாணி மற்றும் இவர்களது மனைவியருக்கு மட்டுமே இலவச அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இதனால் ராஜமௌலி, ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் உள்ளிட்ட RRR குழுவில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் தலா 25,000 டாலர் (ரூ.20 லட்சம்) வீதம் செலவு செய்து தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் செலவு செய்து தான் கடைசி இருக்கை கிடைத்தது என தகவல் வெளிவந்தது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.