ரொமான்ஸ்ல தான் பின்னுறீங்கன்னு பார்த்த…ஒர்கவுட்லையும் கலக்குறீங்களே…! ஹிட் சீரியல் நாயகனின் ஸ்மார்ட் லுக் புகைப்படம் !!!

0

சன் டிவியில் மிக விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. பல எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் இதுவாகும். இந்த சீரியலின்  கதாநாயகனான அர்ஜுன் என்கிற சிபு சூரியன் தனது ஜிம் ஒர்கவுட் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் அவரின் ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. இந்த சீரியல் தற்போது வரை 800 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. மேலும் டிஆர்பில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் அளவுக்கு  ரசிகர்களை கொண்டது. இந்த சீரியல் ரோஜா-அர்ஜுன் இடையேயான ரொமான்ஸ், டைகர் மாணிக்கத்தின் மகள் அணு யார் என்பதற்கான விறுவிறுப்பு போன்ற காட்சிகள் நிறைந்தவை.

மேலும் அவ்வப்போது ஏற்படும் கதையின்   திருப்பங்கள் அந்த சீரியலை ரசிகர்களை தினமும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டக்கூடியவை. மேலும் ரசிகர்களை ஈர்க்க அவ்வப்போது கதையமைப்பை மாற்றியும் வருகின்றனர். இந்நிலையில் அந்த கதையின் நாயகன் சிபு சூரியன் அவர்கள் தான் ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்திற்கு அவரின் ரசிகர்களுடன் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here