ரூ.18 ஆயிரத்துக்கு ஏலம் போன காணக்கிடைக்காத அரிதான ஆரஞ்சு நிற நத்தை!!!

0

ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட மிக அரிதான ஆரஞ்சு நிற கடல் நத்தை ரூ.18000 க்கு ஏலம் போயுள்ளது.

ஆந்திராவில் கிழக்கு கோதாவரியை சேர்ந்த ஜெகன்நாதம் என்ற மீனவருக்கு கோதாவரி ஆற்றங்கரையில் ஒரு அரிதான நத்தை ஒன்று கிடைத்துள்ளது. முதலில் அது சங்கு என்று நினைத்தவர், பின்னர் கரைக்கு வந்து பார்த்ததில் அது ஒரு அறிய நத்தை என்பதை புரிந்து கொண்டார். கடலில் வாழும் நத்தையிலேயே மிக பெரிய நத்தை இது என்று கூறப்படுகிறது.

 

இந்த ஆரஞ்ச் நிற நத்தை பெரியதாகி வளரும் போது கிட்டத்தட்ட 18 கிலோ வரை வளரும் தன்மையுடையதாம். இந்த வகை நத்தை  ‘சிரிங்ஸ் அரோனாஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இதை கண்டுபிடித்த மீனவர் அதை ஏலத்தில் விற்றுள்ளார். இந்த நத்தையை ரூ. 18 ஆயிரத்திற்கு ஜெகதீஷ் என்ற வியாபாரி ஏலத்தில் எடுத்தார்.

இந்த அரிய வகை நத்தையானது விலைமதிப்பு மிக்கதாகும். இதற்குள் முத்துக்கள் இருக்கவும் வாய்ப்புள்ளது என்று குண்டூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் லட்சுமண் குமார் கூறியுள்ளார். தற்போது அந்த நத்தையின் புகைப்படங்கள் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here