ஒழுங்கா எதுவும் கேக்க மாட்டியா?? கொலைவெறியுடன் கிரிக்கெட் வீரர் கழுத்தை நெரித்த ரோஹித்!!

0
ஒழுங்கா எதுவும் கேக்க மாட்டியா?? கொலைவெறியுடன் கிரிக்கெட் வீரர் கழுத்தை நெரித்த ரோஹித்!!

தினேஷ் கார்த்திக்கின் கழுத்தை நெரித்துக் கொண்டு ரோகித் சர்மா திட்டியதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மைதானத்தில் ஏற்பட்ட சலசலப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் T20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரின் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவித்த போதிலும் மோசமான தோல்வியை சந்தித்தனர். இதனால் மைதானத்தில் ரோஹித் சர்மா தனது கோபத்தை தினேஷ் கார்த்திக் மீது வெளிப்படுத்தியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது ஆஸ்திரேலிய அணி பேட்டிங் போது யுவேந்திர சாஹல் வீசிய பந்தில் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் எல்.பி.டபள்யூ ஆனார். ஆனால் இதை இந்திய பவுலரும், விக்கெட் கீப்பரும் கவனிக்கவில்லை. ஒருவேளை இதை இந்திய வீரர்கள் கவனித்து இருந்தால் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்திருப்பார். இதே போன்ற செயல் மீண்டும் ஆட்டத்தின் 11.6 ஓவரின் போது நடைபெற்றது.

ஆசிய கோப்பை.., தரமான இந்திய அணி அறிவிப்பு.., மீண்டும் பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை!!

அப்போதும் விக்கெட் கீப்பரான தினேஷ், அம்பையரிடம் அவுட் பற்றி எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்தார். இதனால் கோபமடைந்த ரோஹித் சர்மா ஓழுங்கா ரிவியூவ் கேட்க மாட்டியா என அவரது கழுத்தை நெரித்து கொண்டு தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இதற்கான புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் பார்ப்பதற்கு கோபத்தை வெளிப்படுத்துவது போன்று இருந்தாலும் ரோஹித் விளையாட்டாக தான் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here