இந்திய அணி மீது ரசிகர்கள் கோபம்.., ரோஹித் ஷர்மா பண்ண தவறு என்ன?

0
இந்திய அணி மீது ரசிகர்கள் கோபம்.., ரோஹித் ஷர்மா பண்ண தவறு என்ன?
இந்திய அணி மீது ரசிகர்கள் கோபம்.., ரோஹித் ஷர்மா பண்ண தவறு என்ன?

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்ததற்கான காரணம் பற்றி ரோகித் சர்மா கூறிய தகவல்கள் ரசிகர்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

IND VS SL:

ஆசிய கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் நேற்று இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்வதற்காக வெற்றியை தக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதே போன்று நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய வீரர்கள் 20 ஓவர் முடிவில் 173 ரன்கள் குவித்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பிறகு வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 19.5 ஓவர் முடிவில் ஓவர் முடிவில் 174 ரன்கள் குறித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை தோல்வியடைச் செய்தது. இதனால் இந்திய அணி தற்போது இறுதிப்போட்டிக்கு செல்வது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் இந்திய அணி வீரர்களான ரோகித், சூரியகுமார் யாதவ் சிறப்பாக ஆடி அதிக ரன்கள் குவித்தனர். இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் பந்து வீச்சாளர்கள் அனைவரும் சொதப்பியதால் இந்திய அணி மீண்டும் தோல்வியை தழுவியுள்ளது. இதில் சஹால் மற்றும் புவனேஷ் குமார் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி மிடில் ஓவர்களில் அதிக விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆனால் மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் அதிக ரன்கள் வாரி கொடுத்து இந்திய அணியை தோல்வி அடைய செய்துள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் நாங்கள் போட்டியில் கொஞ்சம் கவனத்துடன் ஆடியிருந்தால் வெற்றி பெற்றிருப்போம். மேலும் இன்னிங்ஸின் முதல் பாதியை நாங்கள் சரியாக பயன்படுத்தி இருந்திருந்தால் இன்னும் அதிக ரன்கள் குவித்திருக்க முடியும் என அணியின் கேப்டன் கூறியுள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் போட்டியில் வெற்றி பெறாமல் காரணம் கூறினால் எப்படி சரியாகும் என படும் கோபத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here