மாநில அமைச்சர் மாரடைப்பால் மரணம் – முதல்வர் உருக்கத்துடன் வெளியிட்ட இரங்கல் பதிவு!!

0

கர்நாடக மாநிலத்தின் வனத்துறை அமைச்சராக பதவி வகித்த  உமேஷ் கட்டி, மாரடைப்பு காரணமாக தனது 61-வது வயதில் நேற்று மாலை உயிரிழந்தார்.

அமைச்சர் உயிரிழப்பு:

கர்நாடக மாநிலத்தில், பாஜக தலைமையிலான முதல்வர் பசவராஜ் பொம்மை ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் உமேஷ் கட்டி. 61 வயதான இவர், நேற்று மதியம் மாரடைப்பால் தனது வீட்டில் மயங்கி சரிந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அங்கிருந்தபடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இது குறித்து, உருக்கமாக பேசிய மாநில முதல்வர் பொம்மை, 6 முறை எம்எல்ஏவாக இருந்த ஒரு திறமையான ராஜதந்திரியை கர்நாடகம் இழந்துள்ளது. அவரின் இறுதி சடங்கு, முழு அரசு மரியாதையுடன் இன்று மதியத்துக்கு மேல்  நடக்கும் என தெரிவித்துள்ளார்.

இவரது உடல் பாகேவாடி பெலகாவியில் தகனம் செய்யப்படும் என்றும், இதனால் பெலகாவியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மாநில அமைச்சரின் இந்த இழப்புக்கு, அரசியல் பிரபலங்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here