எந்த அணியிலும் இடமில்லை.., இளம் வீரரை ஏமாற்றிய ரோகித் சர்மா.., திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!!

0
எந்த அணியிலும் இடமில்லை.., இளம் வீரரை ஏமாற்றிய ரோகித் சர்மா.., திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!!
எந்த அணியிலும் இடமில்லை.., இளம் வீரரை ஏமாற்றிய ரோகித் சர்மா.., திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!!

இந்திய அணிக்காக பல சர்வதேச தொடர்களில் சிறப்பாக விளையாடியதன் மூலம் சஞ்சு சாம்சனை T20 உலக கோப்பையில் எடுப்பதாக கூறி ரோகித் சர்மா ஏமாற்றி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

T20 உலக கோப்பை!!

உலக கோப்பை தொடரில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தற்போது இந்திய அணி மேற்கொண்டு வருகிறது. இந்த போட்டிக்காக ஒவ்வொரு வீரர்களையும் சரியான முறையில் தேர்வு செய்து BCCI வெளியிட்டது. இந்த அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெறுவார் என அனைவரும் நினைத்தனர். ஆனால் சஞ்சு அணியில் இடம்பெறாதது ரசிகர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பு ரோகித் சர்மா சஞ்சு சாம்சனை போன்ற திறமையான ஒரு பேட்டர் ஆஸ்திரேலிய மைதானத்திற்கு தேவையான ஒருவர் என பாராட்டியிருந்தார். ரோஹித் இது போன்று கூறியதால் சஞ்சு சாம்சன் உலக கோப்பை தொடரில் இடம் பெறுவார் என அனைவரும் நம்பிக்கையாக இருந்தனர். ஆனால் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. மேலும் உலக கோப்பைக்கு முன்னதாக நடைபெறும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 அணிகளிலும் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை.

இந்நிலையில் ரசிகர்கள் இது போன்ற ஆசை காட்டி ஏன் மோசம் செய்ய வேண்டும் என ரோகித் சர்மாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் டி20 தொடரில் மோசமாக விளையாடி வரும் ரிஷப் பந்த்க்கு இடம் கொடுக்கும் போது ஏன் சஞ்சு சாம்சனுக்கு இடம் அளிக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் சிலர் ஆஸ்திரேலியா போன்ற பெரிய பிட்சுகளில் சாஞ்சுவினால் ஆட முடியாது என நினைத்து தான் ரோகித் சர்மா இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here