களத்தில் மட்டுமின்றி இணையத்திலும் அசத்தி வரும் கோலி.., புதிய உச்சம் தொட்டு சாதனை!!

0
களத்தில் மட்டுமின்றி இணையத்திலும் அசத்தி வரும் கோலி.., புதிய உச்சம் தொட்டு சாதனை!!
களத்தில் மட்டுமின்றி இணையத்திலும் அசத்தி வரும் கோலி.., புதிய உச்சம் தொட்டு சாதனை!!

சமூக ஊடகங்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

விராட்டின் சாதனை!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி பல வருடங்களாக சதம் அடிக்க முடியாமல் பல்வேறு விமர்சனங்களுக்கு தள்ளப்பட்டார். இந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடப்பாண்டு ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்த தொடரில் அவர் சிறப்பாக விளையாடியதன் மூலம் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இந்த ஒரு சதத்தின் மூலம் அவர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக வலம் வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

விராட் கோலி இந்த சாதனையையும் தாண்டி சமூக வலைதளங்களிலும் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். அதாவது அவரது ட்விட்டர் பக்கத்தில் 5 கோடி பாலோவர்ஸ்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கோலி அடைந்துள்ளார். இதை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் 211 மில்லியன் பாலோவர்ஸ்களுடன் உலகின் மூன்றாவது விளையாட்டு வீரராகவும் திகழ்ந்து வருகிறார்.

கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (476 மில்லியன்) முதல் இடத்திலும் லியோனல் மெஸ்ஸி (356 மில்லியன்) 2-வது இடத்திலும் உள்ளனர். அதே போன்று பேஸ்புக்கில் 49 மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கோலிக்கு உள்ளனர். இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் மொத்தம் 310 மில்லியனுக்கும் அதிக ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். மேலும் ட்விட்டர் பக்கத்தில் அதிக பாலோவர்ஸ்களை கொண்ட முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here