IND VS AUS.., இந்த வீரர் எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பார்.., ஆஸி அணியை அச்சுறுத்திய முன்னாள் வீரர்!!!

0
IND VS AUS.., இந்த வீரர் எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பார்.., ஆஸி அணியை அச்சுறுத்திய முன்னாள் வீரர்!!!
IND VS AUS.., இந்த வீரர் எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பார்.., ஆஸி அணியை அச்சுறுத்திய முன்னாள் வீரர்!!!

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

விராட் கோலி

நடப்பு ஆண்டில் ஒரு நாள் உலக கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற இருப்பதால் அனைத்து அணிகளும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றனர். மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 4 வது போட்டி வரும் 9 ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியின் முடிவில் தான் எந்த அணி தொடரை கைப்பற்றும் என்பது தெரிய வரும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்கையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு அதிக ரன் எடுப்பது ஒரு சிரமமான விஷயமாகவே உள்ளது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி 3 வது போட்டியில் வெற்றி பெற்றது. இன்னொரு பக்கம் இந்திய அணி என்று சொன்னாலே நினைவிருக்கும் வருவது விராட் கோலி தான். அவரது ஆட்டம் அந்த அளவிற்கு அனைவரையும் கவர்ந்ததாகவே உள்ளது.

IPL 2023.., இது என்னடா MI அணிக்கு வந்த சோதனை.., சிக்கலை சரிக்கட்டி வெற்றி பெறுவார்களா???

கடந்த மூன்று வருடங்களாக பார்மின்றி தவித்து வந்த இவர் இந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள், T20 போட்டிகளில் அதிரடி காட்டினார். அதே போன்று டெஸ்ட் தொடரிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி குறைவான ரன்கள் மட்டும் எடுத்தார். இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் விராட் கோலியின் ஆட்டம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. கூடிய விரைவில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் என்று ரிக்கி பாண்டிங் விராட் கோலியை புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here