தமிழக விவசாயிகளே கவனம்., இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியீடு! விவரங்கள் உள்ளே!!

0
தமிழக விவசாயிகளே கவனம்., இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியீடு! விவரங்கள் உள்ளே!!
தமிழக விவசாயிகளே கவனம்., இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியீடு! விவரங்கள் உள்ளே!!

தமிழக விவசாயிகள் பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், பயிர் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியிடப்பட்டுள்ளது.

தேதி வெளியீடு:

மத்திய அரசு விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான், திட்டத்தின் மூலம் வருடம் தோறும் 6000 ரூபாய் 3 தவணையாக வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு காப்பீடு தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க திருவாரூர், வேலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, நாமக்கல், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

விவசாயிகள் தங்கள் பயிரிட்டுள்ள நெல், பருத்தி, எள், கரும்பு போன்ற பயிர்களை காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டத்தில் இணைந்து கடன் பெறும் விவசாயிகள் இதற்கு தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை. இதுவரை, இதில் கடன் பெறா விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஜாக்டோ ஜியோ திடீர் போராட்டம்.,10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரிக்கை! அரசுக்கு நெருக்கடி!!

இதற்கான, விண்ணப்பங்கள் அனைத்தும் இம்மாத 15ஆம் தேதி முதல் தொடங்கி 31 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. மாவட்ட வாரியாக இதற்கான, தேதிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது சார்ந்த கூடுதல் தகவல்களைப் பெற விவசாயிகள் அருகில் உள்ள, வேளாண் மையத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here