தமிழகத்தில் தற்போது பொது முடக்கம் தேவையில்லை – தலைமை செயலாளர் சண்முகம்!!

0
review meeting
review meeting

தமிழகத்திற்கு தற்போது பொதுமுடக்கம் முடக்கம் இல்லை என்று தலைமை செயலாளர் க.சண்முகம் நேற்று நடத்திய ஆய்வில் தெரிவித்தார். அதில் தற்போது பொதுமுடக்கம் தேவை இல்லை என்றும் , பாதிப்பு அதிகம் உள்ள இடங்களை மட்டும் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆலோசனை:

கோவையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தலைமை செயலளர் க.சண்முகம் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது அவர் தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் 3 சதவீதத்திற்கு கீழ் குறைந்து உள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு 5 சதவீதத்திற்கு மேல் உள்ளதாகவும் தெரிவித்தார். சென்னை, கோவை மற்றும் சேலம் ஆகிய இடங்களில் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

review meeting
review meeting

இத்தகைய இடங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவற்கான நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும் என்று நேற்று நடத்திய ஆய்வு கூட்டத்தில் தெரிவித்தார். இக்கூட்டத்தில் ஆட்சியர் கு.ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன், அரசு மருத்துவ முதல்வர் பொ.காளிதாஸ், இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் ஏ.நிர்மலா, சுகாதார துறை துணை இயக்குநர் ஜி.ரமேஷ்குமார் மற்றும் இணை இயக்குநர் கிருஷ்ணா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நடவடிக்கை

தமிழகத்தில் கொரோனா மேலும் அதிகமாக பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதிகமாக பரவும் இடங்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். அதிகம் பாதிப்படைந்த இடங்களில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். தினசரி பாதிப்பான 100 மேல் உள்ள இடங்களில் 100 ஆகவும், 100 உள்ள இடங்களில் 50 ஆகவும் ஆக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அடுத்த 20 நாட்களில் பாதிப்பு வீரியம் அதிகம் காணப்படும். ஏனெனில் தீபாவளி பண்டிகைக்காக மக்கள் கொரோனா பாதிப்பை கண்டு கொள்ளாமல் சுதந்திரமாக நடமாடி கொண்டு இருக்கின்றன.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

corono virus
corono virus

அவர்களை கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தீபாவளியை அடுத்து கொரோனா பாதிப்பில் ஏதேனும் மாற்றம் காணப்பட்டால் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று கூறினார். எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிற்கான வழியை மேற்கொள்ள வேண்டும். தற்போது சென்னையில் 30% எதிர்ப்பு சக்தி அதிகமாக காணப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி விரைவில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார். ஆகையால் தற்போது பொது முடக்கம் தமிழகத்திற்கு தேவை இல்லை என்றும், பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களை மட்டும் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here