டேஸ்டியான “பாஸ்மதி அரிசி கேரட் சாதம்” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!

0

நம் வாழ்வில் மிகவும் இன்றியமையாதது உணவு. “உணவே மருந்து” என்ற பழமொழி உண்டு. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் சத்துக்கள் நிறைந்தவையாக இருக்க வேண்டும். தினமும் கீரை, முட்டை, கேரட், பச்சை காய்கறிகள் போன்றவை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கேரட் ரைஸ் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

கேரட் – கால் கிலோ

பாஸ்மதி ரைஸ் – அரை கிலோ

பட்டை, கிராம்பு, ஏலக்காய் – 2

புதினா – ஒரு கைப்பிடி

பாதாம், முந்திரி – 4

காய்ந்த மிளகாய் – 3

நெய் – ஒரு டீ ஸ்பூன்

கடுகு – ஒரு டீ ஸ்பூன்

எண்ணெய் – தேவைக்கேற்ப

மல்லித்தழை – ஒரு கைப்பிடி

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் முந்திரி, பாதாமை லேசாக வறுத்து கொள்ளவும். பின்னர் ஒரு டீ ஸ்பூன் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காயை வறுக்கவும், கடைசியில் காய்ந்த மிளகாயை வறுக்கவும். வறுத்த அனைத்து பொருட்களையும் மிக்சியில் போட்டு லேசாக அரைக்கவும். பாஸ்மதி அரிசியை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு பொரிந்ததும் புதினா மற்றும் துருவிய கேரட் சேர்த்து வதக்கவும், பிறகு ஊற வைத்த அரிசியை போட்டு லேசாக வறுக்கவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின் வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்துவிட்டு, ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும். இறுதியாக நெய் மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறலாம். சுவையாக இருக்கும். குழந்தைகள் மீண்டும் மீண்டும் கேட்பார்கள். சுவை மட்டுமின்றி ஆரோக்கியம் நிறைந்த உணவாகவும் இருக்கும். கேரட், சாப்பிட்டால் முகம், முடி வளர்ச்சி மற்றும் கண் பார்வைக்கு நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here