மீண்டும் 40 ஆயிரம் ரூபாயை தொடும் தங்கத்தின் விலை – தவிப்பில் மக்கள்!!

0

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ஆயிரம் ரூபாயை நெருங்கி உள்ளது. ஊரடங்கு உத்தரவால் உரிய வருமானம் இன்றி தவிக்கும் மக்கள், இவ்வாறு விலை உயர்வதால் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

தங்கத்தின் விலை:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் 7 மாதங்களை தாண்டியும் பின்பற்றப்பட்டு வருகிறது. இது ஏற்படுத்திய தாக்கம் சீரடைய இன்னும் 10 ஆண்டுகள் கூட ஆகலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வர்த்தகத்தில் ஈடுசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா, முதலீட்டாளர்களை திக்குமுக்காட வைத்தது. இதனால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரிக்க, விலையும் விண்ணைத் தொட்டது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கடந்த ஆகஸ்ட் மாத மத்தியில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 43 ஆயிரம் ரூபாயை தாண்டியது. இதுதான் வரலாற்றிலேயே அதிகபட்ச விலை ஆகும். மேலும் வரும் நாட்களிலும் விலை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தொழில்துறை நிபுணர்கள் கணித்துள்ளனர். கடந்த மாதத்தில் சிறிது சிறிதாக குறைந்து வந்த தங்கத்தின் விலை, இம்மாத தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து கொண்டே வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தீபாவளி போன்ற பண்டிகை காலம் நெருங்கி விட்ட நிலையில் விலைவாசி உயர்வு மக்களை பாடாய் படுத்துகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) 38 ரூபாய் அதிகரித்து ரூ.4,922 க்கும், ஒரு சவரன் ரூ.308 உயர்ந்து ரூ.39,376 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here