சமையல் எண்ணெயில் பறந்த விமானம்…, ஆராய்ச்சியாளர்கள் படைத்த புதிய சாதனை!!

0
சமையல் எண்ணெயில் பறந்த விமானம்..

வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால், காற்று பெருமளவு மாசு அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், மின்சாரத்தால் இயக்க கூடிய பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையிலும் உள்ளது. சாலை போக்குவரத்தில் காற்று மாசு குறைந்து வரும் நிலையில், வான் போக்குவரத்தில் ஒயிட் பெட்ரோல் மூலமே விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இதனாலும், காற்று மாசு படும் என்பதால் பசுமை எரிபொருள்கள் மூலம் விமானங்கள் இயக்க திட்டமிட்டது.

இதன்படி, காய்கறிக் கழிவுகள், சோளத்தட்டை, பழைய சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு  பசுமை எரிபொருள்களை உற்பத்தி செய்து லண்டன் ஆராய்ச்சியாளர்கள்  ‘விர்ஜின் அட்லாண்டிக்’ நிறுவனத்தின், போயிங் (Boeing) 787 ரக பயணிகள் விமானத்தை பறக்க வைத்துள்ளனர். லண்டனில் இருந்து புறப்பட்டு சென்று நியூயார்க் நகரம் வரை பறந்த இந்த விமானம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கி உள்ளது. சோதனைக்காக ஒருவர் மட்டுமே பயணித்த இந்த விமானத்தின் மூலம்,  70% அளவுக்கு கார்பன் உமிழ்வு குறைந்துள்ளதால் போக்குவரத்தில் சிறந்த சாதனையை படைத்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்திய கிரிக்கெட் வீரருக்கு திடீர் திருமணம்…, வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here