ரூ.6,000 நிவாரணத் தொகை.., பணியில் களமிறங்கும் பள்ளி ஆசிரியர்கள்.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!

0
ரூ.6,000 நிவாரணத் தொகை.., பணியில் களமிறங்கும் பள்ளி ஆசிரியர்கள்.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!
தமிழகத்தில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதை அடுத்து சமீபத்தில் இதற்கான டோக்கன்கள் வழங்கிய நிலையில் நேற்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிவாரண உதவி தொகை வழங்கும் பணியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 53 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு உதவி தொகை வழங்கப்பட உள்ளது. அதேபோன்று காஞ்சிபுரத்தில் 46 லட்சம், திருவள்ளூரில் 43 லட்சம், செங்கல்பட்டில் 34 லட்சம் பேருக்கு நிவாரண உதவி தொகை வழங்க உள்ளது. இதனால் இத்தனை பேருக்கு ரேஷன் கடை ஊழியர்கள் மட்டும் நிவாரண உதவி தொகை வழங்க முடியாது. எனவே தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை பகுதி நேர வேலையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here