உலக டெஸ்ட் தரவரிசை: பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்…, வெளியான நியூ அப்டேட்!!

0
உலக டெஸ்ட் தரவரிசை: பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்..., வெளியான நியூ அப்டேட்!!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 முதல் 2025 தொடருக்கான புள்ளிப் பட்டியலானது, ஒவ்வொரு அணியும் டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெறுவதை வைத்து, விகிதங்கள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வருகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தற்போது பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் 2வது இடத்திற்கு சரிந்தது. இதில் இந்திய அணி முதல் இடத்திலும், நியூசிலாந்து அணி 3வது இடத்திலும் உள்ளது. இதைத்தொடர்ந்து பங்களாதேஷ், ஆஸ்திரேலியா,வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முறையே 4வது, 5வது, 6வது இடங்களில் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here