பேரறிவாளன்,நளினி உட்பட 7 பேரின் விடுதலை – முதலமைச்சர் அரசு வழக்கறிஞர்,அமைச்சருடன் ஆலோசனை !!!

0
பேரறிவாளன்,நளினி உட்பட 7 பேரின் விடுதலை - முதலமைச்சர் அரசு வழக்கறிஞர்,அமைச்சருடன் ஆலோசனை !!!
பேரறிவாளன்,நளினி உட்பட 7 பேரின் விடுதலை - முதலமைச்சர் அரசு வழக்கறிஞர்,அமைச்சருடன் ஆலோசனை !!!

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது,இந்த ஆலோசனையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் வசித்து வரும் நளினி பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து அமைச்சர் ரகுபதியுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மு க ஸ்டாலின் அமைச்சருடன் ஆலோசனை.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி சென்னை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டார் இந்த கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் பேரறிவாளன் முருகன்,நளினி,ரவிச்சந்திரன்,ஜெயக்குமார்,ராபர்ட் பயஸ்,சாந்தன் ஆகிய 7 பேரும் தண்டனை பெற்று வருகின்றனர்.இதில் பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது மற்ற நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது,

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஜனாதிபதிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரும் கருணை மனு அனுப்பினார்கள் அந்த மனுவை விசாரித்து முடிவு எடுக்காமல் சற்று காலதாமதம் ஆனதால் அவர்களுக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக 2014 ஆம் ஆண்டு குறைத்தது நீதிமன்றம்.

பேரறிவாளன்,நளினி உட்பட 7 பேரின் விடுதலை
பேரறிவாளன்,நளினி உட்பட 7 பேரின் விடுதலை

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதற்குப்பின், அவர்களின் சிறை காலம் முடிவடைந்தும் விடுதலை பெறாமல் சிறைவாசம் பெற்று வந்தனர். ஏற்கனவே ஆளுநரிடம் மற்றும் உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது எனவே உச்சநீதிமன்றம் இதனைப் பற்றி தமிழக அரசு ஒரு நிலைப்பாட்டை எடுக்கலாம் என்று கடைசியாக கூறியிருந்த நிலையில் தமிழக முதலமைச்சராக இருக்கும் முக ஸ்டாலின் தலைமை அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மற்றும் புதிய சட்டத் துறை அமைச்சர் ரகுபதி ஆகிய இருவரிடமும் ஆலோசனை நடத்தி வருகிறார் இவர்களின் விடுதலை குறித்து கூட்டணி கட்சி தலைவர்கள் ஏற்கனவே வலியுறுத்தி இருந்ததால் இந்த ஆலோசனை நடந்து கொண்டிருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here