இயக்குனர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்கு பதிவு – பதில் மனு தாக்கல் செய்தார் ஷங்கர்!!!

0
இயக்குனர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்கு பதிவு - பதில் மனு தாக்கல் செய்தார் ஷங்கர்!!!
இயக்குனர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்கு பதிவு - பதில் மனு தாக்கல் செய்தார் ஷங்கர்!!!

இயக்குனர் சங்கர் மீது லைகா நிறுவனம் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது அதில் இந்தியன் 2 படத்தை எடுத்து முடிக்காமல் வேறு படங்களை எடுக்க அனுமதிக்கக் கூடாது தடை விதிக்குமாறு மனு தாக்கல் செய்துள்ளது. இயக்குனர் சங்கர் அந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்தியன் 2 திரைப்படமானது கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தை தயாரித்த லைகா நிறுவனம் இயக்குனர் ஷங்கர் மீது வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. அதில் இயக்குனர் சங்கர் இந்தியன் 2 படத்தை எடுத்து முடிக்காமல் வேறு படத்தை எடுப்பதை எடுக்க தடை விதிக்குமாறு அந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது அதற்கு இயக்குனர் சங்கர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார் அதில் அவர் கூறியுள்ளது என்னவென்றால் பல உண்மைகளை மறைத்து பொய்யான வழக்கை தாக்கல் செய்து என்மீது குற்றம் சாட்டியுள்ளது லைக்கா நிறுவனம்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இயக்குனர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்கு
இயக்குனர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்கு

இதில் திலராஜு என்பவர்தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார் இருந்தார் ஆனால் அவரிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி லைகா நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. படப்பிடிப்பு மே மாதம் 2018 ஆம் ஆண்டு தொடங்க முடிவு செய்தோம் இந்த படத்தை தயாரிப்பதற்கு 270 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டது ஆனால் அதை மறுத்த லைகா நிறுவனம் பட்ஜெட்டை குறைக்கும்படி எங்களிடம் கேட்டது நாங்களும் அவர்கள் கூறியதை யோசித்து 270 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தை 250 கோடி ரூபாயாக மாற்றி கொடுத்தோம்.அதன்பின் லைகா நிறுவனம் படப்பிடிப்பை தொடங்க விடாமல் காலதாமதத்தை ஏற்படுத்தும் வகையில்படப்பிடிப்பை தொடங்கவிடாமல் தாமதம் ஏற்படுத்திக் கொண்டே வந்தது இதனால் படப்பிடிப்பு தள்ளிப்போனது படப்பிடிப்பின் போது ஒரு சில விபத்துகள் ஏற்பட்டன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதாவது நடிகர் கமல்ஹாசனுக்கு மேக்கப் அலர்ஜிகள் போன்ற தொற்று படப்பிடிப்பின் போது கிரேன் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் மற்றும் கொரோனாவால் ஊரடங்கு போன்றவையால் படப்பிடிப்பு மிகவும் தாமதமானது இதனால் நஷ்டங்கள் ஏற்பட்டன இதற்கு நான் பொறுப்பல்ல வரும் ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க நானும் எனது படக்குழுவினரும் தயாராக உள்ளோம்,இதனை சற்றும் கண்டுக்காமல் லைகா நிறுவனம் என் மீது தவறான பொய்யான எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது என பதில் மனுவில் இயக்குனர் ஷங்கர் கூறியிருந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here