ரீல்ஸ் உள்ளிட்ட பொழுதுபோக்கு வீடியோவிற்கு தடை., மெட்ரோ நிர்வாகம் அதிரடி உத்தரவு!!!

0

சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ரயில் சேவையை பயன்படுத்துபவர்கள் அதிகரித்து வருவதால் மெட்ரோ நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கை மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரெயில்களில் ரீல்ஸ் உள்ளிட்ட பொழுதுபோக்கு செயல்கள் நடந்து வருகிறது.

இதுபோன்ற லைக்ஸ் மோகப்பிரியர்களால் சக பயணிகளுக்கு தொடர்ந்து இடையூறுகளும் சிக்கல்களும் ஏற்பட்டு வருகிறது. மேலும் இவர்கள் போடும் குத்தாட்டத்தால் சில நேரங்களில் அசம்பாவித செயல்களும் அவ்வப்போது ஈடேறுகிறது. இதையடுத்து மெட்ரோ ரயில் பெட்டிக்குள் இதுபோன்ற வீடியோக்களை எடுக்க கூடாது என டெல்லி மெட்ரோ நிர்வாகம் எச்சரித்து வந்தது.

ஆனால் இதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அரங்கேறி வருவதால் அதிரடியாக தடை விளம்பர பலகையை வெளியிட்டுள்ளனர். அதில் “டெல்லி மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் ரீல்ஸ் உள்ளிட்ட பொழுதுபோக்கு வீடியோக்கள் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு “போஸ்டர்களை மெட்ரோ ரயில் பெட்டிகளுக்குள்ளும் ஒட்ட வேண்டும்” என பலரும் தடை உத்தரவுக்கு பாராட்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here