6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வி துறை தகவல்!!

0
school reopen latest

ஹரியானா மாநிலத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் அங்கு மீண்டும் பள்ளிகளை திறக்க ஹரியானா மாநில அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி அங்கு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹரியானா பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பு:

நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பினால் மூடப்பட்ட பள்ளிகளும் கல்லூரிகளும் தற்போது படிப்படியான திறக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த மாநிலங்களின் நிலைக்கேற்ப மாநில அரசுகள் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்து வருகின்றன. அதன்படி தற்போது தமிழகத்தில் கடந்த 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதுபோலவே நாட்டின்ஒரு சில மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுளன.

இந்நிலையில் ஹரியானா மாநிலத்திலும் தற்போது பள்ளிகளை திறக்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்த அறிவிப்பை ஹரியானா அமைச்சர் கடந்த வியாழன்று வெளியிட்டிருந்தார். தற்போது பள்ளிக்கல்வி துறையும் 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி முதல்வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை வெளியான இது குறித்த அறிவிப்பில் “கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளதாகவும் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரறிவாளன் விடுதலை வழக்கு – 3 முதல் 4 நாட்களில் ஆளுநர் முடிவு!!

முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் ஹரியானாவில் 9முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன் பிறகு ஏற்பட்ட கொரோனா தொற்றினால் பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பின் டிசம்பர் மாத மத்தியில் அம்மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது 6 முதல் 8 வரை பள்ளிகள் திறக்கப்படவிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here