ஜனவரி 27 சசிகலா, பிப்ரவரி 5 இளவரசி – சிறையில் இருந்து ‘ரிலீஸ்’!!

0

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரோடு சிறைக்கு சென்ற இளவரசியும் அடுத்த மாதம் 5ம் தேதி விடுதலையாவார் என தெரிகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கு:

மறைந்த முன்னாள் முதல்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி சசிகலா, இளவரசி, மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு தலா 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாடு திரும்பியவுடன் எதிர்க்கட்சி தலைவர் அதிரடி கைது – ரஷியாவில் பரபரப்பு!!

இதை தொடர்ந்து அவர்கள் மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர்களது தண்டனை காலம் முடிவடைவதை தொடர்ந்து வரும் 27ம் தேதியன்று சசிகலா விடுதலையாவார் என சொல்லப்படுகிறது. முன்னதாக சசிகலா மற்றும் இளவரசிக்கான அபராததொகை கட்டப்பட்டு விட்டதை தொடர்ந்து அவர்கள் விடுதலை செய்யப்படும் தேதி உறுதியாகியுள்ளது. சுதாகரனுக்கான அபராதத் தொகை கட்டுவது தாமதமானதால் அவரது விடுதலையும் தள்ளிப்போயுள்ளதாக தெரிகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்புக்கு முன்னரே 35 நாட்கள் சசிகலா சிறையில் இருந்தார். அந்த நாட்கள் அவரது தண்டனை காலத்திலிருந்து கழிக்கப்பட்டாலும், அவர் பரோலில் சென்ற 17 நாட்கள் அவரது தண்டனை காலத்தில் சேர்க்கப்படும். எனவே பரப்பன அக்ரஹார சிறைத்துறை அதிகாரிகள் கூறியது போல சசிகலா வரும் 27ம் தேதியும், இளவரசி பிப்ரவரி 5ம் தேதியும் விடுதலையாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here