தளபதி 66 இல் விஜயுடன் மீண்டும் இணையும் பிரபல இயக்குனர் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள தளபதி 65 படத்தின் இயக்குனரின் பெயர் முடிவாகிவிட்ட நிலையில் தற்போது அதற்கு அடுத்ததாக தயாராகவுள்ள தளபதி 66 படத்தின் இயக்குனர் பற்றிய தகவல்களும் வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி 66

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் படம்தான் மாஸ்டர். இது வரையில் 240 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படும் மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கவிருக்கும் படத்திற்கு தளபதி 65 என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் வரும் ஏப்ரல் மாதம் முதல் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று (பிப்..,9) தேசிய பல் வலி தினம் – எதற்காக தெரியுமா??

இந்நிலையில் தற்போது விஜயின் தளபதி 66 படத்தினை இயக்கவிருக்கும் இயக்குனரின் பெயரும் வெளியாகியுள்ளது. பொதுவாக விஜய் ஒரு படத்தை நடித்து முடித்த பிறகுதான் அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும். ஆனால் அவரது படத்தின் இயக்குனர் குறித்த தகவல்கள் முன்னதாகவே வெளியாகிவிடும். அந்த வகையில் விஜயின் தளபதி 66 படத்தினை இயக்கப்போவது லோகேஷ் கனகராஜ் எனும் செய்தி வெளிவந்துள்ளது. இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலும் மாஸ்டர் படத்தின் வெற்றியினால் இந்த கூட்டணி பற்றிய செய்தி விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here