ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் – புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து அணி முன்னேற்றம்!!

0

இன்று முடிந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இங்கிலாந்து அணி முன்னேறியுள்ளது.

இங்கிலாந்து:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி முதலாவதாக டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. கடந்த 5ம் தேதி துவங்கப்பட்ட இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணியினர் பிரம்மிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேலும் இவர்களின் பௌலிங்கை எதிர்கொள்ள இந்தியா அணியின் பேட்ஸ்மேன்கள் திணறி வந்தனர். முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணி தனது வெற்றியை பதிவு செய்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் வகிக்கிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் வைத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறவுள்ளது. இதனை டெஸ்ட் போட்டியை ஊக்குவிப்பதற்காக நடத்துகின்றனர். இந்த இறுதி போட்டிக்கு எற்கனவே நியூஸிலாந்து அணி முன்னேறியுள்ளது. மற்றொரு அணியாக எந்த அணி இறுதி போட்டிக்கு செல்லப்போகிறது என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

வெண்பாவின் சதியால் உயிருக்கு போராடும் கண்ணம்மா – காப்பாற்றுவாரா பாரதி??

அதற்காக இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் போட்டி போடுகிறது. தற்போது இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக தனது வெற்றியை பதிவு செய்வதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வியினால் இந்தியா அணி புள்ளி பட்டியலில் பின்னுக்கு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here