நயன்தாரா தயாரிப்பில் “ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்” – புதிய படத்துக்கான அறிவிப்பு!!

0

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா முன்னணி நடிகையாக வலம் வருவதோடு, தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அவரது தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்திற்கு “ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்” என அழகாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா:

தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் அத்தனையிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. நடிப்பில் பல உச்சங்களை தொட்டுள்ள இவர் தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் இணைந்து “ரவுடி பிக்சர்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சில சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா சீரியல் முடியப் போகிறதா?? குழப்பத்தில் ரசிகர்கள்!!

ஏற்கனவே அவர்கள் தயாரிப்பில் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக உள்ள நெற்றிக்கண் மற்றும் கூழாங்கல் ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் தற்போது தங்களது அடுத்த தயாரிப்பான “ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்” என்ற படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகை என்று பெயரெடுத்த நயன்தாரா, தான் தயாரிக்கும் படங்களின் மூலம் நல்ல தயாரிப்பாளர் என்ற பெயரினையும் பெறுவார் என சினிமா துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here