புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நீக்கம் – தமிழிசை சௌந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு!!

0

புதுவையில் துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து தற்போது கிரண் பேடியை அதிரடியாக நீக்கியுள்ளனர்.

புதுவை:

கிரண் பேடி கடந்த 2016ம் ஆண்டு புதுவை துணை நிலை ஆளுநராக பதவி ஏற்றார். ஆனால் அவர் பதவியில் இருந்த பொழுதே புதுவை அரசுக்கும், இவருக்கும் பல பிரச்சனைகள் நீடித்து வந்தது. இதனால் இவர் பதவி பறிபோகும் என்று அனைவரும் கூறி வந்தனர். அதுபோல் ஓர் சம்பவம் தான் அரங்கேறியுள்ளது. தற்போது புதுவை துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண் பேடி அதிரடியாக விடுக்கப்பட்டுள்ளார். மேலும் அடுத்த துணை ஆளுநர் வரும் வரை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தற்காலிக ஆளுநராக நீடிப்பார் என்று தெரிவித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதுகுறித்து புதுவை முதல்வர் நாராயணசாமி பேட்டியில் கூறியதாவது, இவர் புதுவை அரசுக்கு எதிராக பல செயல்களை செய்து வந்தார். மேலும் மக்களுக்கு போய் சேர வேண்டிய பல திட்டங்களுக்கு எதிராக இருந்து வந்தார். பாஜக அரசுக்கு சாதகமாக அவர் செயல்பட்டு வந்தார். இதனால் நான் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சேர்ந்து போய் அவரிடம் பேசினோம். ஆனால் அதனை அவர் உதாசினப்படுத்தினார். புதுவையில் ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக திகழ்ந்தது. மேலும் மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களையும் அவர் தடுத்து நிறுத்தினார்.

நயன்தாரா தயாரிப்பில் “ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்” – புதிய படத்துக்கான அறிவிப்பு!!

தற்போது எங்கள் கோரிக்கை நியாயமானது என்று எண்ணிய மோடி அதிரடியாக அவரை பதவியில் இருந்து தூக்கினார். இது புதுவைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here