கடும் நிதி நெருக்கடியை சந்திக்கும் ஏர் இந்தியா – 10,000 கோடி வரை இழப்பு!!

0

இந்திய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும், நடப்பாண்டில் அதன் நஷ்டம் ரூ.10 ஆயிரம் கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நஷ்டத்தில் ஏர் இந்தியா:

இந்திய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த 2007ல் ஏர் இந்தியாவுடன் உள் நாட்டு விமான சேவை நிறுவனமான இந்தியன் ஏர்லைன்ஸ் இணைக்கப்பட்டது. அதை தொடர்ந்து விமான சேவையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைளை   மத்திய  அரசு மேற்கொண்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து ஏர் இந்தியா நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டில் ரூ.5300 கோடியாக இருந்த நஷ்டக்கணக்கு 2019ம் ஆண்டில் ரூ.8500 கோடியாக உயர்ந்தது. தற்போது 2020ம் ஆண்டின் கணக்கின்படி நஷ்டம் ரூ.10,000 கோடியாக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வர் கெஜ்ரிவால் மகளிடம் பண மோசடி – கைவரிசையை காட்டிய மர்ம நபர்!!

முன்னதாக பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியுள்ள ஏர் இந்தியா தற்போது கடும் நிதி நெருக்கடியையும் சந்தித்துள்ளது. இதன் காரணமாக பங்கு சந்தையில் ஏர் இந்தியாவின் பங்குகள் கடும் விலை வீழ்ச்சியினை சந்திக்க நேரும் என கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாகவே கடும் நிதி பிரச்சினையில் சிக்கியுள்ள இந்நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு நடவடிகைகள் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here