#INDvsENG டெஸ்ட் – 6 விக்கெட்டை இழந்து தோல்வியின் பாதையில் இந்திய அணி!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியின் தங்களது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகின்றனர். அதில் இந்தியா அணி தற்போது 6 விக்கெட்டை இழந்து தவித்து வருகிறது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் தற்போது தங்களது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்களை குவித்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு சுருண்டது. முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 241 ரன்கள் பின் தங்கி இருந்தது. அதன் பிறகு இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. முதல் இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் சொதப்பியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியினர் இந்திய அணியின் அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி வந்தனர். அஸ்வின் சூழலில் இங்கிலாந்து அணி சிக்கியது என்றே சொல்லலாம். இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்து அணி 178 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் 6 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணிக்கு 420 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி.

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கி இந்தியா அணி முதல் இன்னிங்ஸை போலவே இதிலும் சொதப்பி வருகிறது. முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றத்தை தந்துள்ளனர். தனது பங்கிற்கு கில் 50 ரன் அடித்து ஆட்டமிழந்தார். தற்போது இந்தியா அணி 117 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து திணறி வருகிறது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டை வீழ்த்தினார். தற்போது களத்தில் கோஹ்லி மற்றும் அஸ்வின் விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் இந்தியா அணி தோல்வியை நோக்கி பயணிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

லைவ் ஸ்கோர்:

இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ் – 139/6

கோஹ்லி – 45*
அஸ்வின் – 1*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here