வரலட்சுமிக்கு விரைவில் திருமணம் – கிரிக்கெட் வீரருடன் காதல்!!

0
varalaxmi sarathkumar
varalaxmi sarathkumar

நடிகர் விஷாலும் நடிகை வரலட்சுமியும் காதலித்து வந்த நிலையில் அந்த காதலில் விரிசல் ஏற்பட்டது. தற்போது வரலட்சுமிக்கு கிரிக்கெட் வீரர் ஒருவருடன் காதல் ஏற்பட்டதாகவும் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்புகள் வெளியாகுமென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஷால் – வரலட்சுமி:

நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமியும் நடிகர் விஷாலும் கடந்த சில வருடங்களாக காதலித்துவந்தனர். சிறு வயது முதலே நண்பர்களான இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக பத்திரிக்கைகளில் தகவல்கள் வெளியாகின. ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் இவர்களது காதலில் விரிசல் உருவாகியது. எனினும் அவர்கள் நண்பர்களாக தொடர்ந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஷாலுக்கும் தொழிலதிபர் ஒருவரின் மகளுக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டு நிச்சயதார்த்தம் வரை சென்று பிறகு தடைபட்டது.

ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – பொதுமக்கள் கவலை!!

அதன்பிறகு இருவரும் தங்கள் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தனர். குறிப்பாக வரலட்சுமி தமிழிலும் தெலுங்கிலும் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் தற்போது வரலட்சுமி கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் திருமண அறிவிப்புகள் வெளியாகுமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகிழக்கு பருவமழை ஓவர் – தமிழ்நாட்டில் இனிமே வெயில் தான்!!

முன்னதாக சரத் குமாரின் மனைவியான ராதிகாவின் மகள் ரேயானும் கிரிக்கெட் வீரர் அபினவ் மிதுன் என்பவரை மணந்து கொண்டார். அவரை தொடர்ந்து இப்போது வரலட்சுமியும் கிரிக்கெட் வீரரை காதலிப்பதாகவும் அவர் தோனி, கோலி ஆகியோருக்கு நெருங்கிய நண்பர் எனவும் திருமணம் வரையில் அவர் யார் என்பதை ரகசியமான வைத்திருக்க முடிவு செய்துள்ளதாகவும் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here