ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – பொதுமக்கள் கவலை!!

0

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சரிவை கண்டிருந்த தங்கத்தின் விலை தற்பொழுது சற்றே ஏறத்துவங்கியுள்ளது. இதுவரை சவரனுக்கு ரூ 70 வரை உயர்ந்திருந்த தங்கத்தின் விலை இருமடங்காக அதிகரித்து ரூ 150 வரை உயர்ந்து ரூ 37,056 க்கு விற்கப்படுகிறது.

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம்:

கடந்த இரண்டு வாரங்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை தற்போது சற்று ஏற்றத்துடன் காணப்படுகிறது. தங்கத்தின் விலை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு உலக முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தங்கத்தில் செலுத்தி வந்தனர். இன்று காலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கத்தின் விலையை விட இன்று மாலையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

வெற்றிக்கோப்பையுடன் நடராஜன் – ரஹானேயின் நெகிழ வைக்கும் சம்பவம்!!

தற்போது இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை சற்று ஏறுமுகமாக காணப்படுகிறது. சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை ரூ 70 உயர்ந்து ரூ 36,976 க்கு இன்று விற்கப்பட்டது. மாலைய நிலவரப்படி 22 காரட் தங்கத்தின் விலை ரூ 152 உயர்ந்து ஒரு சவரனுக்கு ரூ 37,056 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 19 உயர்ந்து ரூ 4,632 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து ரூ 70.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here