பப்ஜி விளையாட இதை மட்டும் செய்தால் போதும் – போனிலேயே விளையாடலாம்!!

0

பப்ஜி விளையாட்டிற்கு இருக்கும் வரவேற்பு காரணமாக மீண்டும் இந்தியாவில் அந்த விளையாட்டை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகுமென தெரிகிறது. தற்போது அந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பப்ஜீ விளையாட்டு:

சீன செயலியின் மூலம் விளையாடப்படும் பப்ஜி விளையாட்டுக்கு உலகமெங்கும் ரசிகர்கள் பெருகி வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக பப்ஜீயுடன் சேர்த்து மொத்தமாக 117 செயலிகளை இந்திய அரசு தடை செய்தது. எனினும் கூட அவ்விளையாட்டின் மீதான மோகம் குறையாத இந்திய இளைஞர்களும் சிறுவர்களும் மீண்டும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். தடையின் மூலம் தனக்கு ஏற்பட்ட பலகோடி ரூபாய் நட்டத்தை ஈடு செய்யும் வகையில் பப்ஜி நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது.

வரலட்சுமிக்கு விரைவில் திருமணம் – கிரிக்கெட் வீரருடன் காதல்!!

PUBJ NEW SONG || Best PUBJ Song 2020 || Full Hindi PUBJ Mobile Song || #PUBJ - YouTube

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பீட்டா வெர்ஷனை வெளியிட்ட அந்நிறுவனம் ஜனவரி 15லிருந்து 19க்குள் புதிய வெர்ஷன் வெளியாகும் என சொல்லி ஒரு டீசரை வெளியிட்டது. அதற்கு கிடைத்த பெருமளவு வரவேற்பு கேம் எப்போது ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த கேம்மை எப்படி இந்தியாவில் விளையாடலாம் என்பதை பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி,

  • முதலில் ஏதாவது ஒரு vpn ஐ டவுன்லோட் செய்யவும்
  • அதன் பிறகு இந்தியாவை தவிர வேறு ஏதாவது ஒரு சர்வரை செலக்ட் செய்யவும்
  • கூகிள் குரோம் அல்லது வேறு ஏதாவது ப்ரௌசர் மூலமாக பப்ஜீயின் குளோபல் தளத்திற்கு செல்லவும்.
  • அதன்பிறகு ரைட் சைடில் APK பைலை டவுன்லோட் செய்ய ஒரு பக்கம் ஓபன் ஆகும். அதற்குள் சென்று ஃபைலை டௌன்லோட் செய்யவும்.
  • 624MB க்கும் கூடுதலாக இருக்கும் அந்த பைலை டவுன்லோட் செய்தபிறகு கேம்மிற்குள் செண்டருக்கு பிற பைல்களையும் டவுன்லோட் செய்து விளையாடலாம்.

தற்போது இந்த கேம்மை ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் மட்டுமே விளையாட முடியும் என்று கூறப்படும் நிலையில் ஆப்பிள் போன் வைத்திருப்பவர்கள் இன்னும் காத்திருக்க வேண்டும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here