மைதானத்தில் எல்லை மீறிய விராட் கோலி, கவுதம் கம்பீரின் சண்டை…, மொத்தையும் இழந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
மைதானத்தில் எல்லை மீறிய விராட் கோலி, கவுதம் கம்பீரின் சண்டை..., மொத்தையும் இழந்த அதிர்ச்சி சம்பவம்!!
மைதானத்தில் எல்லை மீறிய விராட் கோலி, கவுதம் கம்பீரின் சண்டை..., மொத்தையும் இழந்த அதிர்ச்சி சம்பவம்!!

RCB மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில், விராட் கோலிக்கும் கவுதம் கம்பீருக்கும் இடையே அனல் பறக்கும் வாக்குவாதம் நடைபெற்றது.

விராட் கோலி VS கவுதம் கம்பீர்:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், நேற்று லக்னோ அணியை எதிர்த்து RCB அணி மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த RCB அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்திருந்து. சேஸிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணி, நிலை இல்லாமல், 108 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில், லக்னோ அணி 16 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்த போது, நவீன் உல் ஹக் மற்றும் விராட் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதன் தொடர்ச்சியாக, போட்டி முடிந்த பிறகும் வாக்குவாதம் நீண்டதையடுத்து, லக்னோ அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீர், விராட் கோலியை எதிர்த்து கடுமையாக பேசியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையிலான வாக்கு வாதத்தை மற்ற வீரர்கள் சமாதானப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த வாக்கு வாதத்தினால், ஐபிஎல் நடத்தையை மீறியதாக போட்டிக்கான கட்டணத்தில் இருந்து விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீருக்கு 100% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அசத்தலான பில்டிங்கை வெளிப்படுத்திய RCB…, 108 ரன்களுக்கே லக்னோவை சுருட்டி அபார வெற்றி!!

இதனை தொடர்ந்து, லக்னோ அணியின் நவீன் உல் ஹக்கிற்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்த இரு அணிகள் மோதிய ஆட்டத்தில், லக்னோ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் RCB அணியை வீழ்த்தியது. இந்த போட்டி முடிந்த பிறகு, லக்னோ அணியின் ஆலோசாகரான கவுதம் கம்பீர், RCB ரசிகர்களை பார்த்து finger on lips என செய்கை செய்தது பெரும் சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here