அசத்தலான பில்டிங்கை வெளிப்படுத்திய RCB…, 108 ரன்களுக்கே லக்னோவை சுருட்டி அபார வெற்றி!!

0
அசத்தலான பில்டிங்கை வெளிப்படுத்திய RCB..., 108 ரன்களுக்கே லக்னோவை சுருட்டி அபார வெற்றி!!
அசத்தலான பில்டிங்கை வெளிப்படுத்திய RCB..., 108 ரன்களுக்கே லக்னோவை சுருட்டி அபார வெற்றி!!

ஐபிஎல் தொடரில், லக்னோ அணிக்கு எதிரான போட்டியை, RCB அணி அசத்தலான பில்டிங்கால் 18 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

ஐபிஎல்:

ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை எதிர்த்து, 43 வது லீக் போட்டியில் மோதியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற RCB அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, விராட் கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் RCB அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் குவித்திருந்தனர். இதில், விராட் கோலி 31 ரன்களில் வெளியேற, அனுஜ் ராவத் 9, கிளென் மேக்ஸ்வெல் 4, சுயாஷ் பிரபுதேசாய் 6 என அடுத்தடுத்து விக்கெட் சரிந்தது. இதனால், 20 ஓவர் முடிவில், RCB அணி 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதில், அதிகபட்சமாக ஃபாஃப் டு பிளெசிஸ் 44 ரன்கள் எடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. பவர் பிளே ஓவரிலேயே 27 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி தடுமாறியது. மேலும், RCB அணியின், கட்டுக்கோப்பான பில்டிங்கால் லக்னோ அணி, 19.5 ஓவரில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியால், RCB அணி 10 புள்ளிகளுடன் 5 வது இடத்தையும், லக்னோ அணி 3 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here