குடும்ப அட்டைதாரர்களுக்கு ஷாக் – 60,000 நபர்களின் ரேஷன் கார்டு ரத்து? புதுவை அரசு அதிரடி!!

0
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஷாக் - 60,000 நபர்களின் ரேஷன் கார்டு ரத்து? புதுவை அரசு அதிரடி!!
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஷாக் - 60,000 நபர்களின் ரேஷன் கார்டு ரத்து? புதுவை அரசு அதிரடி!!

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காததால், மாநிலம் முழுவதும் உள்ள 60,000 நபர்களின் குடும்ப அட்டையை ரத்து செய்ய புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.

ரேஷன் கார்டு ரத்து :

மாநிலம் முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், அரசின் மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரேஷன் கார்டான ஸ்மார்ட் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என மத்திய அரசு அறிவித்தது. அந்த வகையில், புதுச்சேரியில் 3.50 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் இருந்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர்கள் 13,400 நபர்கள், புதுவை போக அண்டை மாநிலங்களில் உள்ள ரேஷன் கார்டுகளிலும் தங்கள் பெயர் இடம்பெறச் செய்திருப்பது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இவர்களில், 10,000க்கும் மேற்பட்ட நபர்களின் கார்டுகளை, ரத்து செய்ய அரசு முடிவு எடுத்துள்ளது. இது போக மாநிலம் முழுவதும் உள்ள 60,000 நபர்கள், இன்னும் ரேஷன் கார்டுடன் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வில்லை.

தமிழக மக்களே உஷார்., 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

இது குறித்து கேள்வி எழுப்பிய புதுவை அரசு, இவர்கள் உண்மையில் புதுவை வாசிகளா? என்று சந்தேகம் தெரிவித்துள்ளது. இதுபோக இவர்கள், பற்றிய ஆய்வை மேற்கொண்டு விரைவில் அவர்களின் ரேஷன் கார்டுகளை கேன்சல் செய்ய முடிவு எடுத்துள்ளது. கடைசி வாய்ப்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் தானாக முன் வந்து, துறை சார்ந்த அலுவலகத்தில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்து விட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here