மொட்டை மாடி போட்டோஷூட்டையே மிஞ்சிட்டீங்களே ரம்யா பாண்டியன் – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரம்யா பாண்டியன் தொடர்ந்து தனது புகைப்படங்கள் யாவையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்ஸ் அள்ளி வருகிறது.

குக் வித் கோமாளி ரம்யா பாண்டியன்

தமிழில் வெளியான ஜோக்கர் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவும் இல்லை. நீண்ட வருடங்களுக்கு பிறகு சமுத்திரக்கனி உடன் ஆண் தேவதை என்ற படத்தில் நடித்திருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த படமும் ஹிட் கொடுக்காததால் மனமுடைந்த ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சிறு வயதில் இருந்தே தனக்கு இருந்த சமையல் ஆசையால் கொஞ்சம் கொஞ்சமாக சமைக்க கற்று கொண்டார்.

இதனால் குக் வித் கோமாளியின் இறுதி சுற்று வரை முன்னேறினார். இந்த நிகழ்ச்சியின் போது அவர் வெளியிட்ட மொட்டை மாடி போட்டோ ஷூட் பிரபலமானது. ஒரே நைட்டில் பிரபலமானார் ரம்யா பாண்டியன். குக் வித் கோமாளியின் அவரது பொறுமையும் சிரித்த முகமும் தான் மக்கள் பலரையும் கொள்ளை கொண்டது.

தல அஜித் ஷாலினியுடன் எடுத்த கியூட் போட்டோஸ் – ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்!!

அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இத்தனை நாட்கள் பொறுமை சாலி என்று பெயர் வாங்கிய அவர் விஷ பாட்டில் என்றும் பெயர் வாங்கினார். பலரும் இவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் ஆரம்பித்தனர். ஆனால் கடைசி வரைக்கும் வீட்டுக்குள் இருந்தது என்னவோ ரம்யா பாண்டியன் தான்.

சிங்கப்பெண் என்றும் பெயர் வாங்கினார். வீட்டை விட்டு வெளியே வந்ததும் பல ஆரவாரங்களுடன் வீட்டில் வரவேற்றனர். தற்போது தொடர்ந்து பல போட்டோஷூட் நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

எப்படியாவது படவாய்ப்புகளை பெற்று விட வேண்டும் என்று பல வேலைகளை செய்து வருகிறார் ரம்யா பாண்டியன். தற்போது பச்சை நிற உடையில் சிக்குன்னு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here