சுவையான “முட்டை பகோடா” ரெசிபி – குழந்தைகளுக்கான வீக்எண்டு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்!!

0

மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு என்று பிரியமான உணவு பதார்த்தம் இருந்தால் அது நன்றாக இருக்கும். அதற்கு இன்று சுவையான “முட்டை பகோடா” ரெசிபி குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

  • முட்டை – 4
  • கடலை மாவு – 2 டீஸ்பூன்
  • மைதா மாவு – 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • இஞ்சி & பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • மல்லித்தழை – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • வெங்காயம் – 1

செய்முறை

முதலில், எடுத்து வைத்துள்ள முட்டையினை வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். பின், ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கடலை மாவு, கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லி தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். பின், மிக்சியில் வெங்காயத்தினை நறுக்கி அதனை நன்றாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும். அதனையும் இந்த கலவையுடன் சேர்த்து கொள்ள வேண்டும். இதில் இஞ்சி & பூண்டு விழுது, உப்பு மற்றும் கொத்தமல்லித்தழை ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் அண்ணியுடன் செய்யும் கூத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்!!

அவ்வப்போது இந்த கலவையில் தண்ணீர் சேர்த்து கிண்டி விட வேண்டும். பின், வேக வைத்து எடுத்த முட்டையினை எடுத்து நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். பின், முட்டையினை எடுத்து வைத்துள்ள கலவையில் நன்றாக பிரட்டி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதனை குறைந்த அளவு தீயில் வைத்து நன்றாக பொறிக்க வேண்டும். பொன்னிறமாக வரும் வரை பார்த்து விட்டு நன்றாக பொரிக்க வேண்டும். இதனை சாஸுடன் பரிமாறலாம். அவ்ளோ தான்!!

சுவையான “முட்டை பகோடா” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here