Saturday, April 27, 2024

எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மனஉளைச்சல் – ராஜ்யசபா துணைத்தலைவர் உண்ணாவிரதம்!!

Must Read

ராஜ்யசபாவில் வேளாண் மசோதாக்களை நிறைவேற்றும் போது எதிர்க்கட்சிகள் செய்த அமளியில் தான் மிகவும் அவமதிக்கபட்டதாக கருதுவதாகவும் அதனால் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க போவதாக ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ் சிங் வெங்கையா நாயுடுவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ராஜ்யசபாவில் வேளாண் மசோதா:

ராஜ்யசபா மழைக்கால கூட்டத் தொடர் கடந்த சில நாட்களாக நடந்து வருகின்றது. இதில் நாட்டில் நடக்கும் அனைத்து விதமான பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு வந்தன. அதில் விவசாயிகளின் நலன் கருதி வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வந்தது. இந்த மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன. இதனால், எதிர்கட்சிகளை சேர்ந்த எம்.பி.,கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் காகிதங்களை கிழித்து துணைத்தலைவர் ஹரிவன்ஷ் சிங் மீது எறிய முயன்றனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

rajyasabha
rajyasabha

இதனால் ராஜ்யசபா கூட்டத்தில் கூச்சல் மற்றும் குழப்பம் நீடித்தது. அமளியில் ஈடுபட்ட டெப்ரிக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜூ சதவ், கேகே ராஜேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நசீர் ஹூசைன், எலமாரன் கரீம் ஆகிய எம்.பிக்கள் அநாகரிகமாக நடந்து கொண்டதற்காகவும், கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியதற்காகவும் வெங்கையா நாயுடு அவர்களை சஸ்பெண்ட் செய்தார். இதனால் அடுத்து நடக்கும் கூட்டத்தொடரில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வெங்கையா நாயுடுவிற்கு கடிதம்:

இதனை கண்டித்து இவர்கள் ராஜ்யசபாவில் தர்ணாவில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இவர்கள் தர்ணாவில் ஈடுபட்ட போது ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ் சிங் அவர்களுக்கு தேநீர் எடுத்து வந்து கொடுத்தார். ஆனால், அவர்கள் அதனை ஏற்கவில்லை. இதனால், அவர் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானார்.

“என்லட்” சட்டக்கல்வி நுழைவுநுழைவுத் தேர்வு ரத்து – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

அவர் வெங்கையா நாயுடுவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது “ராஜ்யசபாவில் எம்.பிக்கள் நடந்து கொண்ட விதம் என்னை மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளது. என்னால் இரவு சரியாக தூங்க கூட முடியவில்லை. அதனால் நான் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க தீர்மானித்துள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் 8 எம்.பி.,க்களும் தற்போது உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -